
பணம், தங்குமிடம், சுதந்திரம்
புரிந்துகொள்ளக்கூடிய வகையில், பணத்தின் மீதான பயமும் எங்கு வாழ்வதென்பதும் உங்களை கட்டுப்படுத்தும் அல்லது வன்முறையான துணையிடம் உங்களைச் சிக்க வைக்கும். இது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் தீர்வுகள் உள்ளன பல்வேறு தெரிவுகளூடாக உங்கள் சுதந்திரத்தை மீண்டும் நாங்கள் நிலை நிறுத்துவோம்
சாட்சியங்கள்
நான் அவருக்காக பிரான்சுக்கு வந்தேன். நான் நல்ல ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டேன், அங்கு மதிப்பும் மரியாதையும் பெற்றதாக உணர்ந்தேன். நான் வந்தபோது, பிரெஞ்சு மொழியின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனக்கு வேலை கிடைக்கவில்லை. பிரிந்த நேரத்தில், பிரெஞ்சுக் கணக்கில் அவர் பெயரில் இருந்த எனது சேமிப்புகள் அனைத்தையும் அவர் முடக்கினார். என்னிடம் எதுவும் மிச்சமில்லை, காவல்துறையால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். எனது நாட்டில், இது பொருளாதார வன்முறையாக கருதப்பட்டிருக்கும், ஆனால் நான் அறிந்ததிலிருந்து இந்த பொருளாதாரத் துஷ்பிரயோகம் பிரான்சில் சட்டப்பூர்வமாக உள்ளது! எனது பணத்தை நான் மீண்டும் பார்க்கவில்லை நான் முதலில் இருந்து ஆரம்பித்து, உயிர் வாழ்வதற்காக முதல் வேலையை எடுக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் மீறி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அடைந்த முன்னேற்றம் குறித்து பெருமைப்படுகிறேன். நான் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டேன், எனது நிபுணத்துவத் துறையில் ஒரு வேலையைக் தேடிக்கொண்டேன், எனக்கு சிறந்த நண்பர்கள் உள்ளனர், இறுதியாக மீண்டும் சேமிக்கத் தொடங்கினேன்
நான் பிரான்சுக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன், அவர் விரைவில் என்னுடன் வன்முறையில் ஈடுபட்டார். அதை மீண்டும் செய்ய மாட்டேனென்று ஒவ்வொரு முறையும் உறுதியளித்தார். நான் சட்டவிரோதமாக இங்கு இருந்தேன், இதனால் அவர் இல்லாமல் எனக்கு எவ்வாய்ப்பும் இல்லையென்று அவர் என்னிடம் கூறினார். எங்கே போவதென்று கூடத் தெரியவில்லை. திரும்பிப் பார்க்கையில், அவரை சார்ந்து என்னை இருக்க முயற்சித்திருக்கிறார் என்பதை இப்போது உணர்கிறேன். நான் வன்முறைக்கு ஆளானேன் என்பதை புரிந்து கொள்ள உதவிய ஒரு சங்கத்துடன் சந்திப்பை முடித்தேன், அவர்கள் எனது ஆவணங்களுடன் எனக்கு உதவினார்கள்.
எனது இயலாமையால் எனக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம் எனது பிரிவிற்குப் பிறகு, நான் மிகவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் இருந்தேன். அதிஷ்டவசமாக, நான் ஒரு சமூக சேவகரைச் சந்தித்தேன், அவர் உள்ள அமைப்புகளைப் பற்றி எனக்குத் தெரிவித்தார். இப்போது, நான் ஒவ்வொரு மாதமும் நிதி உதவி பெறுவதுடன் எனது வேலை தேடலில் Cap Emploi இன் ஆதரவைப் பெறுகிறேன், மேலும் நண்பர்களை உருவாக்கக் கூடிய நடன வகுப்புகளுக்கு நான் பதிவு செய்துள்ளேன்.