எங்களின் புலம்பெயர் வினாப்பட்டியல், நீங்கள் விண்ணப்பிக்கும் பிரெஞ்சு வதிவிட உரிமைகள் என்ன என்பதைத் தீர்மானிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வினாப்பட்டியல், தற்போது பிரான்சில் உள்ள, செல்லுபடியாகும் அல்லது செல்லுபடியாகாத வதிவிட உரிமைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே
வினாப்பட்டியல் முற்றிலும் பெயரறியப்படாதது.
எங்கள் பெயர் அறியப்படாத புலம்பெயர் வினாப்பட்டியயலை பூர்த்தி செய்வதன் மூலம் உங்கள் தகுதியைச் சோதிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் பிரெஞ்சு வதிவிட உரிமைகளைப் பெறுவதற்கு உங்களை அனுமதிக்கும் முக்கிய அளவுகோல்கள் அல்லது “fondements” மூலம் உலாவலாம். வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்கான பல தெரிவுகளும் இதில் அடங்கும்.
இவை ஏற்கனவே பிரான்சில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த நிபந்தனைகள் எதுவும் உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால், நீங்கள் ஒரு குடியேற்ற நிபுணரை அணுகலாம், அவர் உங்கள் நிலைமையை ஆராய்ந்து, உங்களுக்கு வேறு என்ன தெரிவுகள் இருக்கக்கூடும் என்பதைத் தீர்மானிப்பார்
சாட்சியங்கள்
எனது பிரெஞ்சுக் கணவரின் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்க நாங்கள் ஜப்பானை விட்டு வெளியேறினோம். நாங்கள் வந்தவுடன் வன்முறை தொடங்கியது. துரதிஷ்டவசமாக, எனது பிள்ளைகள் இப்போது பிரான்சில் வசிப்பதால், பிரெஞ்சு சட்டத்தின்படி அவர்களுடன் நாட்டை விட்டு வெளியேற நான் அனுமதிக்கப்படவில்லை. எனது வதிவிட அனுமதிப்பத்திரம் எனது துணைவரால் அனுசரனையளிக்கப்பட்டது.அதனால் நான் அவரை விட்டுபிரிந்தால் எனது பிள்ளைகளிடமிருந்து நாடு கடத்தப் படுவேனா என்ற பயம் இருந்தது. வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வதிவிட அனுமதி இருப்பதையும், எனது பிள்ளைகள் பிரெஞ்சுக்காரர்களாவும் பள்ளிக்குச் செல்வதாலும் நான் பிரான்சில் தங்க முடியும் என்பதையும் கண்டுபிடித்தேன். பல வருடங்கள் கழித்தும் விட்டுக் கொடுக்காததை நினைத்து இன்றும் மகிழ்ச்சி அடைகிறேன். என் பிள்ளைகளும் நானும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம், என்னையும் பிள்ளைகளையும் மரியாதையுடனும் கருணையுடனும் நடத்தும் அழகான புதிய கணவர் எனக்கு இருக்கிறார்.
நான் இங்கே சட்டவிரோதமாக இருந்தேன், என் துணைவர் அதை எனக்கு எதிராகப் பயன்படுத்தத் தொடங்கினார். வன்முறை தீவிரமானது, ஆனால் நான் உதவியற்றவனாக உணர்ந்தேன். அவர் பிரான்சில் தங்குவதற்கான ஒரே வாய்ப்பு என்றும் நான் அவரை விட்டுவிட்டால் அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று மிரட்டினார். அதிஷ்டவசமாக, ஆவணங்கள் இல்லாமல் கூட, நான் ஒரு பாதுகாப்பு உத்தரவைப் பெற முடிந்தது, இது எனக்கு குடியிருப்பு அனுமதிக்கான உரிமையை வழங்கியது. எனது ஆவணங்களைப் பெற முடிந்ததில் எந்நேரத்திலும் நிம்மதியாகவும் பதட்டம்மில்லாமலும் இருக்கிறேன். எங்களுக்கு பொதுவான நண்பர்கள் உள்ளதால் இந்நாட்களில் நான் அவரைப் பார்க்க நேர்ந்தது, ஆனால் அவர் என் மீது தனது ஆதிக்கத்தை வைத்திருக்கவில்லை என்பதை அவர் கண்கள் காட்டியது நான் அதைவிட வலிமையானவள்.
நான் பிரான்சுக்கு வந்தபோது, நான் எனது சுற்றுலா நுழைவுச்சான்றில் தங்கியிருந்தேன். நான் நினைக்கிறேன்… சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவனாக நான் பேச விரும்பாத பல காரணங்களால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. என்னிடம் பணமும் வேலை செய்ய உரிமையும் இல்லை. அதனால் பல வருடங்கள் பாலியல் தொழிலாளியாக வேலை செய்தேன். நான் நிறுத்த விரும்பியபோது, விபச்சாரத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் சிறப்பு வாய்ந்த ஒரு சங்கம் உங்களுடன் இருந்தால், நீங்கள் வதிவிட அனுமதி பெறலாம் என்பதைக் கண்டறிந்தேன் அவர்கள் எனக்கு அறிவுரை கூறினார் மற்றும் செயற்முறை மூலம் எனக்கு உதவினார்கள். இன்று, எனக்கு புதிய வேலை கிடைத்தது, நீண்ட கால நுழைவுச்சான்றை பெற முடிந்தது.