சாட்சியங்கள்
நான் பிரான்சுக்கு வந்தபோது, நான் பிரெஞ்சு மொழியில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் எனக்கு பாடம் எடுப்பதை என் வாழ்க்கைத் துணை விரும்பவில்லை. நானும் வேலை செய்வதை அவர் விரும்பவில்லை. அவர் என்னைக் கவனித்துக் கொள்வதாக சொன்னார். அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினார். ஒவ்வொரு முறை பல்பொருள் அங்காடிக்குச் செல்லும் போதும் அவரிடம் பணம் கேட்க வேண்டியிருந்தது. இது பல ஆண்டுகளாக தொடர்ந்தும் கூட, அவரின் ஊடாக உடல் ரீதியான வன்முறை இருப்பதை உணர்ந்து, நான் வெளியேற வேண்டி ஏற்பட்டது. பயணம் நீண்டதாக இருந்தது,ஆனால் என்னால் பிரான்சில் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை கட்டியெழுப்ப முடிந்தது.
அவர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியபோது, நான் பயந்தேன், நான் எப்படி நடந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் நான் குற்றவாளியாக உணர்ந்தேன், அது என் தவறு என்று நினைத்தேன். நான் இறுதியாக அவரை விட்டு வெளியேற முடிவு செய்தபோது, என்னிடம் ஆவணங்கள் இல்லாததால், போலீசில் புகார் செய்வதாக மிரட்டினார். நான் முழுவதுமாக மாட்டிக் கொண்டேன், ஆனால் என் அன்பானவர்களிடம் சொல்லக் கூட வெட்கப்பட்டேன். அதிஷ்டவசமாக, எனது உரிமைகளைப் புரிந்துகொள்ளவும், எனது பயணத்தில் எனக்கு உதவவும் ஒரு சங்கத்தை நான் கண்டுபிடித்தேன். நான் இன்னும் மீள எழும்புகிறேன்.
பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்பதை உணர எனக்கு வெகு காலம் பிடித்தது. திருமணக் கற்பழிப்பு பற்றி மக்கள் அதிகம் பேசுவதில்லை, ஒரு வெளிநாட்டவராக நான் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பிரெஞ்சுக்காரர், நான் ஒரு வெளிநாட்டவர். எல்லோரும் என்னை நம்பாமல் அவரை நம்புகிறார்கள் என்ற எண்ணம் எனக்கிருந்தது அவர் மிகவும் நல்லவர் என்று எல்லோரும் நினைத்தார்கள்! எங்கள் உறவுக்கு வெளியே அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார், எல்லோரும் அவர் நல்லவர் என்றும் நான் நம்ப முடியாத வெளிநாட்டவர் என்றும் நினைத்தார்கள். என் வாழ்க்கையில் அந்தக் காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, நான் எதிர்வினையாற்ற இவ்வளவு காலம் எடுத்தது என்று என்னால் நம்ப முடியவில்லை.